search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் எதிர்ப்பு"

    • அதிகாரிகளிடம் வாக்குவாதம்-பரபரப்பு
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்திலிருந்து அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை மற்றும் பெங்களூர் செல்ல தேசிய நெடுஞ்சாலை பஸ் நிலையம் என அனைத்துக்கும் சென்று வர நியூடவுன் ெரயில்வே கேட் கடந்து செல்வதை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    ெரயில்வே கேட் அருகே இந்த சாலையின் ஓரம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பெரிய மரங்கள் உள்ளது. ெரயில்வே கேட்டை கடந்து செல்ல மேம்பாலமும் சுரங்க பாதையோ இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாததால் பள்ளி கல்லூரி செல்பவர்களும், ெரயில்வே கேட்டில் ெரயில் கடக்கும் நேரத்தில் இந்த பழமையான மரத்தின் கீழ் நிழலுக்காக பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

    பழமையான இந்த மரத்தின் கிளைகள் ரயில்வே தண்டவாளத்தின் மேல் உள்ள மின்சார கம்பியில் உரசாமல் இருக்க ரயில்வே அதிகாரிகளின் ஏற்பாட்டால் மரக்கிளை களை வெட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு விடப்பட்டுள்ளது.

    ஆனால் மரக்கிளையை வெட்டும் ஒப்பந்ததாரர் அளவுக்கு அதிகமாக மரக்கிளைகளை வெட்டி வருதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் ெரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்ப ந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மரங்களை அதிக அளவில் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது.
    • இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.


    நாகர்கோவில் : குருந்தன்கோடு அருகே உள்ள செருப்பங்கோடு என்ற இடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க ஆட்சியரின் ஒப்புதல் பெற உள்ளதாக தனியார் நில உரிமையாளர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்போன் டவர் அமைக்க வி.ஏ.ஓ., தாசில்தார், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஒப்புதல் வழங்கக்கூடாது என கோரி அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளனர். செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரூர் அருகே பழைய ரோட்டின் மீது புதிய ரோடு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    தருமபுரி-திருவண்ணா மலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதையிலிருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தருமபுரி-திருவண்ணா மலை 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ஏற்கெனவே தருமபுாி,கோபிநாதம்பட்டி, செம்மண்அள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது 16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு. இச்சாலையில் தருமபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்கள் கட்டப்பட்டு சாலை அமைக்கும் முடி ஒரு முடிவு பெறும் நிலையில் உள்ளது.

    நான்கு வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க தமிழ்நாடு அரசு மூலமாக ஒப்பந்தங்கள் விடப்பட்டு எட்டு ஒப்பந்ததாரர்கள் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் பழைய தார் சாலையின் மீது தார் கலவை கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலையை தரமான சாலையாக இல்லாமல் பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அரூர் அருகே உள்ள சேவா கிராம பகுதியில் பழைய சாலையை அகற்றாமல் பழைய சாலையின் மீது புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஈடுபட்டிருந்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பழைய தார் சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலையை அமைக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்து வந்த அரூர் வட்டாட்சியர் பெருமாள் வி.சி.க., கட்சினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாச்சியர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பழைய ரோட்டின் மேல புதிய ரோடு போடும் பணி நிறுத்தப்பட்டது.

    • வனத் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் பணியைத் தொடங்காமல் திரும்பிச் சென்றனா்

    ஊட்டி,

    ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் விவசாய நிலப்பரப்பு அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவேண்டும்.

    விவசாய நிலப்பரப்பில் அமைக்கக்கூடாது என்று தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

    இந்நிலையில் விவசாயப் பகுதியில் வனத் துறையினா் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பணியைத் தொடங்க வந்த வனத் துறையினரை தடுத்து நிறுத்தினா்.

    இதையடுத்து அப்பகுதியில் வனத் துறையினா் குவிக்கப்பட்டனா்.

    இருப்பினும் விவசாயிகள் எதிா்ப்பால் பணியைத் தொடங்காமல் வனத்துறையினா் திரும்பிச் சென்றனா்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி ஊராட்சி க்கு உட்பட்ட சின்னான் குட்டை குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய விளை நிலங்களின் அருகே கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடி களை பயன்படுத்தி பாறை களை வெடித்து எடுப்பதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாய தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகி வருகின்ற னர்.

    வெடிச்சத்தம் கேட்கும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் அதிக சத்தம் கார ணமாக கால்நடை களுக்கு மலட்டு த்தன்மை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டு கின்றனர்.

    மேலும் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழ த்திற்கு பாறைகளை வெடி த்தெடுப்பதால் அப்பகுதி யில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்து ளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ள்ளது. கற்களை அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் லாரிக ளால் அப்பகுதியில் சாலைகள் சேதம் அடை ந்துள்ளது.

    கல்குவாரிக்கு செல்லும் சாலையில் 4 இடங்களில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் குவாரி உரிமையாளர்க ளுக்கு ஆதரவாக பாலம் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே உள்ள கல்குவாரிக்கு அருகே மீண்டும் ஒரு புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இது சம்பந்தமாக காரா ப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கி னார். சத்தியமங்கலம் வட்டார தலைவர் சுப்பு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் காரப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாரம்பாளையம், மாரம்பா ளையம் புதூர், வகுத்து கவுண்டன்புதூர், நடுப்பாளையம், கொமர பாளையம், தேவம்பா ளை யம், சின்னான்குட்டை கோப்பம்பாளையம், கண்டி சாலை, காரப்பாடி, கோட்ட பாளையம், பாறைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயக் கூலிகள் வசித்து வருகிறோம்.

    எங்களது பகுதியில் ஏற்கனவே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நிலையில் மீண்டும் ஒரு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்குவதாக கூறப்படு கிறது.

    எனவே மீண்டும் இப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து விவசாயிகளின் நலன் கருதி அனுமதி வழங்கக் கூடாது என அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கார ப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமசாமி, விவசாய சங்க நிர்வாகிகள் மோகன் குமார். சுப்பிரமணி.சதீஷ்குமார். முத்துக்குமார். பொன்னுசாமி, சண்முகம், வார்டு உறுப்பினர் லோக நாயகி நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் விவசாயி கள் பலர் கலந்து கொண்ட னர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பணிகள் தடுத்து நிறுத்தம்
    • மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன்.

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட மாவிளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கைளை தனியார் நிறுவனம் தொடங்கியது.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில வாரங்களாக டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் செல்போன் டவர் அமைப்பதற்கான பணியை அந்த நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.

    இதுகுறித்து உடனடியாக இப்பகுதியில் உள்ள மக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதன்பேரில் உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன். குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக இந்த செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    அப்போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயராணி, கருங்கல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் வினோ மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.
    • 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் பெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பழமைவாய்ந்த 5 கோவில்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார், நில எடுப்பு தனி தாசில்தார் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.

    • பொதுமக்கள் கொட்டும் மழையில் திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்
    • பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது

    கன்னியாகுமரி :

    திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட மேல்கரையில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் தலைவர் அஸ்வின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

    அதில், எங்கள் ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தொடர்ந்து ஏற்படும் கதிர் வீச்சு காரணமாக பறவை இனங்கள் அழிந்து விடும்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார்.
    • முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகர் என்ற பகுதியில் 25 ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் 13 குடும்பத்தினருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். இதைத்தொடர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பொதுமக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில் தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு அந்த நபர் பேனர் வைத்தார். ஆனால் பொதுமக்கள் யாரும் வீட்டை காலி செய்யவில்லை.

    இதையடுத்து அந்த நபர் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார். காலை 6.40 மணி அளவில் வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மின் இணைப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், தாசில்தார் உத்திரசாமி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர்.
    • எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து இணைக்கும் சென்னை- கன்னியாகுமரிதொழில் தட திட்ட புதியசாலை அமைக்கும்பணி கடந்த 2021 -ம் ஆண்டு தொடங்கிவேகமாக நடந்து வருகிறது. இந்த புதிய சாலைபணிக்காக நிலம் கையகப்படுத்தும்பணி மற்றும் இழப்பீடு தொகைவழங்கும்பணிகள் முழுமையாக நடந்துமுடிந்தநிலையில் அண்ணாகிராமம் ஒன்றியம் கனிசபாக்கம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர். புதிய போர் போடும் பணி தாமமமானதால் மேல்நிலை நீர்த்தேக்க.தொட்டியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிதகவல்அ றிந்ததும்அங்கு விரைந்து வந்த அண்ணா கிராமம் தி.மு.க. ஒன்றியசெ யலாளர்வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்திகி ராமபொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,என்ஜி னீயர்கள் சுந்தரி, ஜெயந்தி, ஏழிலரசி, நில எடுப்புதனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, மீரா கோமதி, கணிசபாக்கம்பஞ்சாயத்து தலைவர்திருநாவுக்கரசு ஆகியோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்துக்குள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றபிறகு புதிய சாலை அமைக்கும் பணிக்கான பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • மேலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

    மேலூர்

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி இடையே அமைந்துள்ளது கருங்காலக்குடி. இங்கு 24 மணிநேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க காலத்தில் இருந்தே, கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. மேலும் கருங்காலக்குடியில் இருந்து அவசர மற்றும் விபத்து காய சிகிச்சைகளுக்கு மதுரைக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்கு இந்த 108 வாகனம் மிகுந்த உதவியாக விபத்தில் சிக்கிய மக்களின் உயிர் காக்கும் பயனுள்ள வாகனமாக செயல்பட்டு வந்தது.

    மேலும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து காய சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டுமென ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிகாரிகளிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளனர். தற்போது இருக்கும் வசதியையும் குறைக்கும் வகையில் இங்கு இயங்கி வந்த 108 அவசர சிகிச்சை வாகனத்தை அவசர கதியில் தும்பைப்பட்டிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்திரவிட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு வாகனம் தும்பைப்பட்டிக்கு சென்றுவிட்டது. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் அதிகாரிகளிடம் இங்கிருந்து மாற்றம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மீண்டும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.

    • கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னிமலை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் 100-க்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது.

    இங்குள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளின் அனுமதியுடன் விவசாய நிலங்களில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு மற்ற விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    அதேபோல் சிப்காட் பகுதியில் கம்புளியம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட குட்டப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2 வருடங்களாக சிலர் அனுமதி யின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இத னால் அனுமதியின்றி கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடந்த 2 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றை தாசில்தார் சிவசங்கர், நில வருவாய் அலுவலர் தங்க ராஜ், மாசு கட்டு ப்பாட்டு வாரிய அதிகாரி முத்துராஜ் ஆகியோர் சிப்காட் கழிவுகள் கொட்ட ப்பட்ட இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள்.

    அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் விவசாயி களிடம் கூறும் போது, இனி மேல் விவசாய நிலத்தில் சிப்காட் கழிவுகள் கொட்டா மல் இருப்பத ற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    ×